அங்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது, இந்நிலையில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், அதிகப்படியான ரத்தப்போக்கு இருக்கும் நிலையில் ஏரியூர், பென்னாகரம், தர்மபுரி என மருத்துவமனை வட்டாரங்களில் அலைக்கழிக்கப் பட்டதன் காரணமாக சிகிச்சைக்கு தாமதமானது தொடர்ந்து பரமேஸ்வரி தர்மபுரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் பிறந்த ஆண் சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், வட்டார மருத்துவ அலுவலர் பாபு அவர்கள், முக்கியஸ்தர்களை மருத்துவமனைக்கு அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார், விசாரித்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார் உயிரிழந்த சம்பவம் ஏரியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, ஏரியூர் மருத்துவமனை மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது இருப்பினும் உரிய அதிகாரிகள் எவ்வித துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்காததால் உயிர் பறிக்கும் அவலம் தொடர்கிறது.
.gif)

