Type Here to Get Search Results !

மொரப்பூர்அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு உணவு வழங்கிய சுகாதார பயிற்சி மாணவர்.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர்அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் கிராமம் கிராமமாகச் சென்று கொசு  புழு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை பெய்து வரும் நிலையில் வீட்டைச் சுற்றியுள்ள பொருட்கள் . தேங்காய் ஓடு, பானை, சிமெண்ட் தொட்டி, டயர், தூக்கி எறியப்பட்ட பொருட்கள் ,இதில் மழைநீர் தேங்காத வண்ணம்  பாதுகாப்பாக  வைக்க வேண்டும், சிமெண்ட் தொட்டி, தரை தொட்டி 15 நாட்களுக்கு ஒரு  பிளீச்சிங் பவுடரை கொண்டு  தேய்த்து கழுவ வேண்டும்.

காய்ச்சல் உள்ளவர்கள் மொரப்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், என்று விழிப்புணர்வு செய்து வருகின்றனர், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கிய சுகாதார பயிற்சி மாணவர், இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தாசரஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ரங்கநாதன் அவர்கள் கலந்துகொண்டார், மேலும் வீரா பிட்னஸ் ஜிம் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நண்பர்கள் குழு, பயிற்சி சுகாதார ஆய்வாளர் ஹரிராம், மனோஜ், லட்சுமணன், பசுமை அறக்கட்டளை நா .சின்னமணி ஆகியோர் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies