தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சக்கிலிநத்தம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 17ம் தேதி திருட்டு சம்பவம் நடைபெற்றது.
இது தொடர்பாக கோவில் பூசாரி செல்வம் கொடுத்திருந்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார், விசாரணை நடத்தி வந்தனர், விசாரணையில் தண்டுகாரன அள்ளி கிராமத்தை சேர்ந்த சூர்யா (19) என்ற வாலிபர் கைது செய்தது காவல்துறை.
இந்நிலையில் கோவிலில் திருடபட்ட சுமார் 2 பவுன் தங்க தாலிகள் குத்துவிளக்குகள், பஞ்சலோக சாமி சிலைகள் உட்பட மீட்டனர் மாரண்டஅள்ளி போலீசார்.
இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ்(22) என்ற வாலிபர் ஏற்கனவே கைது செய்யபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

