ஒகேனக்கல் பரிசல் துறையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான லைப் ஜாக்கெட் தீயில் எரிந்து கருகி சேதமாகின. மேலும் 10 பரிசல்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்தன.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லிற்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் செல்லும் போது பாதுகாப்பு உயிர் கவசமாக பயன்படுத்தக்கூடிய சுமார் 1000 லைஃப் ஜாக்கெட்டுகள் மர்மமான முறையில் திடீரென தீப்பற்றி எரிந்தன. அப்போது அருகே இருந்த 10 பரிசல் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களும் தீ பற்றின. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முற்பட்டபோது தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
இதனால் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான லைஃப் ஜாக்கெட்டுகள், சுமார் 60 ஆயிரம் மதிப்பிலான பரிசல்களும் மலமலவென தீப்பற்றி எரிந்து தீயில் கருகி சேதமாகின. மர்மமான முறையில் ஏற்பட்ட இந்த தடீர் தீ விபத்து குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.gif)

