நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் இந்த ஜங்சன் பகுதியில் தான் அதிகளவில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போதெல்லாம் இப்பகுதிகளில் காவல்துறை சார்பிலோ அல்லது சாலை பராமரிப்பு நிறுவனம் சார்பிலோ பேரி காட் அமைக்கப்படவில்லை. மேலும் பொதுமக்கள் தொடர்ந்து பல வருடங்களாக இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்று திறப்பு விழா நிகழ்ச்சிநடை பெற்றதால்திடீரென அதற்காக திருமண மண்டப ஸ்பான்சர் மூலம் புறவடை பகுதி பிரிவு சாலையில் பேரி காட்கள் அமைக்கப்பட்டன.
தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினால் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும். அதனைத் தவிர்த்துவிட்டு தனி நபருக்காக அவர்களை திருப்திப் படுத்துவ தற்காக காட்டும் அக்கறையை, தடுப்பு நடவடிக்கை களிலும் காட்ட வேண்டுமென பொதுமக்க ளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கி ன்றனர்.

