பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதல்வர் முனைவர் கூ. செல்வவிநாயகம் தலைமையில் 07.06.2022 இன்று நாட்டு நலப்பணித் திட்டடம் மற்றும் பென்னாகரம் வட்ட நுகர்வோர் (ம) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்திய "உலக உணவு பாதுகாப்பு தினம்" விழிப்புனார்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் கோ. வெங்கடாசலம் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திரு J. ஜெயக்குமார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், தருமபுரி, திருமதி பானு சுஜாதா, நியமன அலுவலர், தருமபுரி, திரு கந்தசாமி, வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பென்னாகரம், திரு நந்தகோபால், வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், பாலக்கோடு வட்டம் மற்றும் திரு R. சம்பத்குமார், தலைவர், பென்னாகரம் வட்ட நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு கீழ்க்கண்டவாறு விழிப்புணர்வுகளை மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.
- சிறுதானிய உணவு முறைகளை மேற்கொள்ளுதல்.
- உணவுக் கலப்படமாவதை தயிர்க்கும் வழிமுறைகளைக் கையாளுதல்.
- உணவே மருந்து என்பதனை உணர்ந்து, ஆரோக்கியமான வாழ்வினை அமைத்துக்கொள்ள வேண்டும்.
- நோயற்ற வாழ்வு வாழ, இயற்கை சார்ந்த உணவுப் பழக்கங்களை தொடர்ந்திட வேண்டும்.

.jpeg)
