அருர் அருகே மேல் செங்கப்பாடி கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள புரட்சியாளர் அம்பேத்கார் திருவுருவச்சிலையை, அனுமதி இன்றி வைத்ததாக வருவாய்துறையும், காவல்துறையும் இணைந்து JCB இயந்திரம் மூலம் அகற்றப்பட்டதை கண்டித்து விடுதலைசிறுத்தைகள் அருர் ரவுண்டானவில் சுமார் 1 மணி நேரத்திற்க்கு மேல் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
பிறகு சம்பவ இடத்திற்க்கு நேரில் வந்த தருமபுரி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் திரு.கலைச்செல்வன் அவர்கள் மறியலில் ஈடுபட்ட சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அகற்றப்பட்ட சிலை அப்பகுதி பொதுமக்களிடத்திலே ஒப்படைக்கப்பட்டது. விரைவில் அனுமதி பெற்று அதே இடத்தில் சிலை நிறுவப்படும்.
.gif)

