தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் 8வது சர்வதேச யோகா தினம் இன்று தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் முனைவர் கிள்ளிவளவன் தலைமையில் நடத்தப்பட்டது. கல்லூரிகல்வி தருமபுரி மண்டல இணை இயக்குநர் முனைவர் ரமாலஷ்மி முன்னிலை வகித்தார், தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் அவர்கள் யோகா பயிற்சிசெய்துகாண்பித்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முருகன் சந்திரசேகர் ராதிகா குப்புசாமி உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் தேசிய மாணவர் படை அலுவலர்கள் தீர்த்தகிரி ஜெயம் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முருகன் மனவளக்கலை முனைவர் சுப்ரமணி ராஜயோகா தியான மைய ஆசிரியை தேவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்பயிற்சியில், 300க்கும் மேலான நாட்டு நலப்பணித்திட்டம் தேசிய மாணவர்கள் கல்லூரி உடற்பயிற்சி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திரா அலுவலக மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார் நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் முனியப்பன் நன்றி கூறினார்.
.gif)



