தகடூர் புத்தகப் பேரவையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் நான்காம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழாவை முன்னிட்டு தர்மபுரி வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி இன்று மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் நடைபெற்றது.
பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தருமபுரி வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் மா. பழனி தலைமையில் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு வாசித்தனர்.
ஒரே நேரத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களும் பாடப்புத்தகம் அல்லாத புத்தகத்தை தேர்ந்தெடுத்து பள்ளி மாணவர்கள் வாசித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் தருவதாக இருந்தது, மாணவர்கள் தாங்கள் படித்த தெரிந்தவற்றை மற்ற மாணவர்களிடம் ஆசிரியர்களிடம் கலந்துரையாடல் மூலம் கருத்துக்களை வெளிப்படுத்தினர், இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, ரதி, திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.gif)

