மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி M. பிரவீனா அவர்கள் தலைமையில், அரசு தலைமை மருத்துவமனை, பென்னாகரம் இயற்கை மற்றும் யோகா வாழ்வியல் மருத்துவர் முனுசாமி அவர்கள் யோகா மற்றும் சூரிய நமஸ்காரம் சார்ந்த பயிற்சிகள் அளித்தார்.
இந்தப் பயிற்சிகள் நம் உடலில் உள்ள உறுப்புகளை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கும் உடல் கழிவுகளை வெளியேற்றுவதற்கும் அவசியம் என்பதனை வலியுறுத்தினார். நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தங்கள், உணவு பழக்கங்கள், நம் உடல் நிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் அதிலிருந்து விடுபடுவதற்கு இயற்கை மற்றும் யோகா நம்மை எவ்வாறு வழிநடத்துகிறது என்பதை பயிற்சியின் போது மருத்துவர் செய்முறை பயிற்சியாக செய்து காட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மாதையன், செயலாளர் ஜானகிராமன், பொருளாளர் தமிழரசன், அரசு வழக்கறிஞர் ஐயப்பன், வழக்கறிஞர்கள் முல்லைவேந்தன், வெங்கடேசன், அசோகன், சரவணன் உட்பட நீதிமன்ற பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள் சின்ன பள்ளத்தூர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மா. பழனி உள்ளிடோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
.gif)

