மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். அதியமான் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ், மாவட்ட கவுன்சிலர் மாது சண்முகம், ஒன்றிய குழு உறுப்பினர் காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் முருகன், அதியமான் கோட்டை ஏ வி எஸ் கல்வி மைய நிர்வாகி விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.
இப்பேரணியில் 50க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் தலைமையில் மிதிவண்டி பேரணியில் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார்.
நிறைவாக நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார். மேலும் உலக மிதிவண்டி தினம் நேரு யுவ கேந்திராவுடன் இணைந்த இளைஞர் மன்றங்கள் சார்பில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் நல்லாம்பட்டி,கு ள்ளாத்திரம்பட்டி, கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் மடதள்ளி, பழைய புதுரெட்டியூர், முனியன்கொட்டாய், தருமபுரி ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம், மணிப்பூர், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் சோமனள்ளி, ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் கணபதிபுரம் அஜ்ஜனள்ளி உள்ளிட்ட கிராமங்களிலும் இதுபோன்று மிதிவண்டி தினம் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.



.jpeg)