பாலக்கோடு பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயலாக்கம் தொடர்பாக விளக்க கண்காட்சி நேற்று நடைபெற்றது. கண்காட்சியில் மக்கும், மக்கா குப்பை வகைகள் தூய்மை பணியாளர்களின் செயலாக்க பணிகள் மண்புழு உரம், இயற்கை உரம் தயாரிப்பு முறைகள், இறைச்சி கழிவு மேலாண்மை மற்றும் மக்கா கழிவுகள் மறு சுழற்சி செய்தல் பயன்பாடு – தேவையற்ற பொருட்களை உபயோகமாக்குதல் வீட்டுத்தோட்டம், மாடி தோட்டம் உருவாக்குதல். மொத்த கழிவு உருவாக்குபவர்கள் தாங்களே கழிவுகளை மேலாண்மை செய்வது குறித்தும் மீண்டும் மஞ்சள்பை மற்றும் தூய்மைக்கான உறுதி மொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், ர.குருராஜன் கண்காட்சியை தொடங்கி வைத்தார் மாவட்ட உதவி செயற் பொறியாளர் ஆர்.கணேச மூர்த்தி மற்றும் பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, செயல் அலுவலர் டார்த்தி, பொறியாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட செயல் அலுவலர்கள் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
.gif)


