இந்த ஆய்வின்போது அங்கிருந்த இ-சேவை மைய பணியாளர்களிடம் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் அரசின் சேவைகளுக்கு விண்ணப்பங்களை வழங்கும்பொழுது, அந்த விண்ணப்பத்துடன் எத்தகைய ஆவணங்களை இணைக்க வேண்டும் என்றும், அவ்வாறு விண்ணப்பிக்கின்ற அனைவருக்கும் அவ்விண்ணப்பங்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி, பேசும்போது தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்கள் வந்து செல்லக்கூடிய அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மக்களுக்கு வழங்கப்படுகின்ற அரசின் சேவைகள் அனைத்தும் காலதாமதமின்றி, உடனுக்குடன் கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.
பொதுமக்களுக்கு தேவையான சேவைகள் அனைத்தும் எளிமையாக கிடைத்திடும் வகையில் பல்வேறு வகையான சான்றிதழ்கள் மற்றும் இதர சேவைகளுக்கு அரசு இ-சேவை மையங்களின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ஆணையிட்டார்.
.gif)


