பாலக்கோட்டில் உள்ள காந்தி ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பாலக்கோடு ஒன்றிய செயலாளர் குட்டி அவர்கள் தலைமையில் உணவு வழங்கி கலைஞரின் 99-வது பிறந்தநாள் விழாவை ஆதரவற்றோர் இல்லத்தில் திமுகவினர் சிறப்பாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் அழகுசிங்கம், முனியப்பன், ஊராட்சி மன்ற தலைவர் குட்டி(எ) முனிராஜ், ஆனந்தன், மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி,மாவட்ட இலக்கிய அணி பொன்.மகேஸ்வரன், வழக்கறிஞர் அன்பரசு, மற்றும் ஆசிரம நிர்வாகிகள் மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
