பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பாலக்கோடு பேரூராட்சி தலைவரும் பேரூர் கழகச் செயலாளருமான பி.கே.முரளி அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகவும், முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா பேருந்து நிலையத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பூக்கள் தூவி பொது மக்களுக்கு உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் குட்டி,மாவட்ட கவுன்சிலர் தீபா முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி, பேரூராட்சி துணைத் தலைவர் இதாயத்துல்லா, ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துசாமி அழகு செங்கம் முனியப்பன் ஊராட்சி மன்ற தலைவர் கூட்டி மற்றும் பாலக்கோடு வார்டு செயலாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கலைஞரின் 99-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பேரூராட்சி தலைவரும் பேரூர் கழகச் செயலாளருமான முரளி அவர்கள் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

