பாலக்கோடு அருகே ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் சர்க்கரை ஆலை அருகே கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கலைஞரின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பாலக்கோடு அருகே ஜெர்த்தலாவ் ஊராட்சி சர்க்கரை ஆலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் திமுக கொடி ஏற்றப்பட்டு கருணாநிதி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் குட்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம், மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி,கிரசர் முனியப்பன், இருசன்,மாவட்ட இலக்கிய அணி பொன் மகேஸ்வரன், கவுன்சிலர்கள் முத்துசாமி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

