இதையடுத்து வனச்சரக அலுவலர் உத்தரவின் பேரில் வாதாப்பட்டி பிரிவு வானவர் யாசின் மற்றும் வனத்துறையினர் உடன் மொரப்பூர் சந்தை மேடு பகுதியில் வனத்துறையினர் வாகன தணிக்கை செய்தனர் இதையடுத்து அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் உர மூட்டையில் மான்கறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வனத் துறையினர் நடத்திய விசாரணையில் வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இரண்டு மான்களை வேட்டையாடி மான் கறியை விற்க முயன்ற எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது இதையடுத்து சக்திவேலை பிடித்த வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடுவின் அறிவுறையின் படி அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் இரண்டு மான்களை வேட்டையாட பயன்படுத்திய கத்தி கட்டைகள் மான்தோல் மற்றும் 20 கிலோ எடையுள்ள மான்கறி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
.gif)

