தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரகாசனஅள்ளி ஊராட்ச்சி ஏர்ராபட்டி கிராமத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் சுமார் 90 ஆண்டு காலமாக இந்நிலத்தில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த 1977ஆம் ஆண்டு வருவாய் துறை வனத்துறைக்கு நிலத்தை வகை மாற்றம் செய்துள்ளது.
இந்த நிலையில் வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள மக்களை தொடர்ந்து காலி செய்ய வேண்டும் விவசாயம் செய்யக் கூடாது என்று தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்எனவே வருவாய் துறையிடம் இருந்து வகை மாற்றம் செய்யப்பட்ட இடத்தை மீண்டும் வருவாய்த்துறையை எடுத்து அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெண்ணாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் பெண்ணாகரம் கிழக்கு ஒன்றிய தலைவர் செல்வம் தலைமை வகித்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி மாதன் .பென்னாகரம் பகுதி குழு செயலாளர் ரவி பாப்பாரப்பட்டி பகுதி செயலாளர் சின்னசாமி பெண்ணாகரம்கிழக்கு ஒன்றிய பகுதி செயலாளர்ஜி சக்திவேல்த மிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சோலை அர்ஜுனன் மாவட்ட தலைவர் கே என் மல்லையன் மாவட்ட துணைத்தலைவர் கே அன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
முன்னதாக பெண்ணாகரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து பெண்ணாகரம் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
.gif)

