இக்கூட்டத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வெளியாகும் குப்பைகளை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என தரம்பிரித்து பேரூராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் குப்பைகளை தரம்பிரித்து தராமலும் அல்லது பொது இடங்களில் குப்பை கொட்டினாலும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தொடர்ந்து வாய்க்கால்கள் ,சாக்கடை செல்லும் கால்வாயில்கள் மற்றும் தெருவிலோ குப்பை கொட்டும் நபர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுவது குறித்தும் பேரூராட்சி முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நியமனக் குழு உறுப்பினர் முல்லைரவி பேரூராட்சி உறுப்பினர்கள் வணிகர் சங்க நிர்வாகிகள் ஏ.வி.சின்னசாமி பேருந்து நிலைய வணிகர் சங்க நிர்வாகிகள் தங்கராஜ் லோகநாதன் சன்சூர்யா வெங்கடேசன் சுகுணா கூல்ட்ரிங்ஸ் உரிமையாளர் ரகுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.gif)

