தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மே 7-ல் சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழுவின் முடிவின்படி தமிழ்நாட்டின் 7 - முனைகளில் இருந்து ஊழியர் சந்திப்பு கோரிக்கை விளக்க வேன் பிரச்சார இயக்கம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இருந்து இன்று துவங்கப்பட்டது.
இந்த பிரச்சாரம் ஆனது இன்று 20 இருந்து 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இந்த பிரச்சாரத்தின் போது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல மாவட்டங்களில் இருந்து சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இந்த இயக்கத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் 4.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்றும் உறுதி அளித்தபடி சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி வரன்முறை செய்து நாற்பத்தி ஒரு மாத ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்றும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் பல கோஷங்கள் எழுப்பி இயக்கத்தை தொடங்கினர் இந்த இயக்கத்தில் மாவட்ட செயலாளர் A-சேகர் தலைமையில் நடைபெற்றது
ஊழியர் சந்திப்பு கோரிக்கை விளக்க பிரச்சார இயக்கத்தை மாநிலத் தலைவர் மு. அன்பரசு கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். இந்த இயக்கத்தின் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
.gif)

