தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு வார காலமாக ஜமாபந்தி நடைபெற்றது.இதில் தருமபுரி சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார்.
அரூர், தீர்த்தமலை, மொரப்பூர் வருவாய் உள்வட்டத்தில் உள்ள, பொய்யப்பட்டி, கீழானூர், செல்லம்பட்டி, வீரப்பநாயக்கன்பட்டி, ஈட்டியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக வருவாய் தீர்பாய அலுவலரிடம் நேற்று வரையில் 923 மனுக்களை அளித்து உள்ளனர்.
இதில் 94 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக வட்டாட்சியர் கனிமொழி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில வட்டாட்சியர் கனிமொழி உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

