Type Here to Get Search Results !

ரூ. 410 கோடி மதிப்பிலான தருமபுரி முதல் திருவண்ணாமலை வரையிலான 4 வழி சாலை திட்ட பணிகள் தொடக்கம்.

தருமபுரி முதல் அரூர் வரை மொரப்பூர் வழியாக இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக மாற்றி அகலப்படுத்தும் பணி ரூ.313.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் திருவண்ணாமலை முதல் அரூர் வரை தானிப்பாடி வழியாக இருவழி பாதையை 4 வழிப்பாதையாக மாற்றி அகலப்படுத்தும் பணி ரூ.96.50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. 

இந்த  இரண்டு சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை தீர்த்தமலை அருகே உள்ள பொய்யபட்டியில் நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் திருமதி.கே.சாந்தி அவர்கள் தலைமை தாங்கினார். இந்த விழாவில் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் எம்.ஜி. சேகர் உள்பட பலர் உள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies