தருமபுரி மாவட்டத்தில் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு ஆயுள் காலம் முடிந்து கழிவு செய்யப்பட்ட 16 நான்கு சக்கர வாகனங்களும், 5 இரண்டு சக்கர வாகனங்களும் வருகின்ற 05.07.2022 ம் தேதி ஏலம் முறையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனை செய்ய உள்ளது.
வாகனங்களை பார்வையிட விரும்பும் நபர்கள் 04.07.2022 ம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் பார்வையிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. 05.07.2022 ம் தேதி காலை 10.00 மணிக்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் நடைபெற உள்ளது என மாவட்ட காவல்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.gif)

.jpg)