தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வேளாண்மைதுறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் . இதனையடுத்து ரெட்டியூர் கிராமத்தில் உள்ள சமுதாய திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மண்புழு உரம், தென்னங்கன்று, பல வகைச் செடிகள், விதைகள், தெளிப்பான், உள்ளிட்ட விவசாய உபகரண பொருட்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் முருகன், உதவி தோட்டக்கலை அலுவலர் கோபாலகிருஷ்ணன், உதவி பொறியியல் துறை அனிதா, உதவி வேளாண்மை அலுவலர் வேளாண் வணிகத்துறை செல்வம், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அம்மா திட்டம் மகேஸ்வரி, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடஜலம்,ஊராட்சி குழு உறுப்பினர் அழகுசிங்கம், மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

.jpeg)