தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசுவாபுரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த வேளாண் உழவர் நலத் துறை மற்றும் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட முகாம் காணொலி காட்சி வாயிலாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து முகாமில் விவசாயிகளுக்கு தென்னங்கன்று, பல வகைச் செடிகள், விதைகள், தெளிப்பான் உள்ளிட்ட விவசாய உபகரண பொருட்களை வழங்கினர், இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் ஜெயராமன் முன்னிலை வகித்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் முருகன், கால்நடை மருத்துவ அலுவலர் சக்திவேல், வட்டார கல்வி அலுவலர் கெளதம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் விவசாயிகள் பெரும்திறளாக இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

