வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பென்னாகரம் பருவதஹாள்ளி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்
இதில் பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு வேளாண்மைத்துறை சார்பில் மரக்கன்றுகள் மற்றும் உளுந்து பொருட்களை வழங்கினர் இதில் பெண்ணாகரம் பேரூராட்சித் தலைவர் வீரமணி வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் சுப்பிரமணி வட்டாட்சியர் அசோக்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலு ரங்கநாதன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

