மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை, தருமபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பாக யோக தின பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஜுன் 21 உலக யோக தினம் கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு கிராமங்களில் யோக குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கபடுகிறது. இன்று அதியமான் கோட்டையில் AVS கற்றல் மையம் மற்றும் சத்தியா யோக பயிற்சி மையம் மூலமாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு யோக பயிற்சி வழங்கபட்டது.
இந்த நிகழ்வில் நேரு யுவகேந்திரா சார்ந்த திரு. அரி பிரசாந்த் மற்றும் திரு. விக்ரம் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர். யோக பயிற்சிகளை யோக ஆசிரியர் திரு. சத்தியநாரயணன் வழங்கினார். இந்நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

