இதையடுத்து போக்குவரத்துக்கு தடையாக இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் இடமாற்றம் செய்யப்பட்டு கழிவுநீர் கால்வாய்கள் மூடப்பட்டு பஸ்கள் வந்து செல்ல வசதியாக பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் புதுப்பிக்கப்பட்ட நல்லம்பள்ளி பஸ் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளுடன் சென்ற பஸ்சை, கொடி அசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜீவரத்தினம், கிளை மேலாளர் செல்வராஜ், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் காமராசு, சோனியா வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் அறிவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

