கவுன்சிலர்களின் இரண்டாம் கூட்டம் தலைவர் இந்திராணி தலைமையில் செயல் அலுவலர் கலைராணி முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரூர் அம்பேத்கர் நகரில் உள்ள பட்டு வளர்ப்பு துறைக்கு சொந்தமான சுமார் 16 ஏக்கர் நிலம் பல வருடங்களாக காலியாக உள்ளது. இந்த இடத்தில் குப்பை கிடங்கு தொடங்கி மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கலாம் என பேசப்பட்டது.
இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இதுபோன்று குப்பை கிடங்கு தொடங்குவது சரியாக இருக்காது என தெரிவித்தனர். அதற்கு பதிலாக அந்த இடத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கலாம் அல்லது பொழுதுபோக்கு பூங்கா, இளைஞர்கள் உடல் திறனை வளர்த்துக்கொள்ளும் மைதானம் அமைக்கலாம் என தெரிவித்தனர்.
இந்த கருத்துக்கு பாமக, சுயேட்சை, ஒரு திமுக உறுப்பினரும் ஆதரவு நிலையிலும் அந்த தீர்மானம் நிறுத்தப்பட்டது . தொடர்ந்து சாலை, சாக்கடை, தெரு விளக்கு வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.