இந்த முகாமில் கலந்து கொண்டு பேசிய தாசில்தார் ராஜசேகரன் தமிழகத்தில் பத்திரப் பதிவு முடிந்தபின், சம்பந்தப்பட்ட தகவல், சார் - பதிவாளர் அலுவலகம் வாயிலாக, வருவாய் துறைக்கு அனுப்பப்படுகிறது. அதன் பின், சொத்து வாங்கியவர், சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தை அணுகி, பட்டா பெயர் மாறுதல் பெற வேண்டும். இதில், ஒரு நிலத்தை முழுமையாக வாங்கும்போது, கணினி வழியே பட்டா பெயர் மாற்றப்பட்டு, புதிய எண்ணுடன் புதிய பட்டா வழங்கப்படும்.
நிலத்தின் ஒரு பகுதியை மட்டும் வாங்குவோர், தனக்கான பாகத்தை உட்பிரிவு செய்து, அதற்கான சர்வே எண் பெற வேண்டும். இதன் அடிப்படையில், பட்டாவில் பெயர் மாற்றப்படும்.உட்பிரிவு செய்து, புதிய சர்வே எண் அடிப்படையில் வழங்கப்படும் பட்டாவில், புதிய வரிசை எண் இருக்கும். மீதமுள்ள நிலத்தின் பட்டாவுக்கும், புதிய எண், கணினி வாயிலாக ஒதுக்கப்படுகிறது.
இதில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து விளக்கினார், மேலும் பட்டா, உட்பிரிவு போன்றவற்றை காலதாமதமின்றி உடனடியாக செய்து தர ஆலோசனை வழங்கினார்.