அரூர் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என வணிகர்கள், பொதுமக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி அண்மையில் தெரிவித்தார் அதனடிப்படையில் குடியிருப்பு பகுதிகள், வணிக நிறுவனங்களில் வெளியாகும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்க வேண்டும்.
குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வணிக நிறுவனங்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக அபராதம் விதிக்கப்படும். என்று தெரிவித்து செயல் அலுவலர் ஆர்.கலைராணி, பேரூராட்சி தலைவர் இந்திராணி துணைத் தலைவர் சூர்யா து.தனபால், துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட பேரூராட்சி ஊழியர்கள் கல்லூரி மாணவர்கள் அரூர் பகுதியிலுள்ள பேருந்து நிலையம் கடை வீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் வழியாக குப்பை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.