தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் புலிக்கரை கிராமத்தில் வசிக்கும் ராஜா என்பவர் விவசாயம் செய்து வருகிறார் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெய்த கனமழையால் அவருடைய வயலில் மின்சார வயர்கள் அறிந்து கீழே விழுந்து விட்டது.
மேலும் கம்பங்கள் சாய்ந்து மின் ஒயர்கள் தாழ்வான பகுதியில் செல்வதால் சரியான நேரத்தில் உழவு செய்ய முடியாமலும் மற்றும் விவசாயம் செய்ய முடியாமல் தவிர்த்து வருகிறார், இது குறித்து புலிக்கரை மின்சார வாரியத்தில் புகார் தெரிவித்து ஒரு மாத காலம் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றார்.
மேலும் இதனை விரைவில் சரி செய்து கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொண்டுள்ளார்.


