தருமபுரி மாவட்டம் கடகத்தூர் ஊராட்சி மணிப்பூர் கிராமத்தில் இன்று கலாமின் இளைஞர்கள் நற்பணி மன்றம் தொடங்கப்பட்டது. இளைஞர் மன்றத்தின் பெயர் பலகையை கடகத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஐவன்னண் திறந்து வைத்தார். நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். மேலும் இளைஞர் மன்றம் தொடங்கியதன் குறிக்கும் வகையில் ஊராட்சி தலைவர் மரக்கன்றுகள் நட்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தேசிய இளைஞர் தொண்டர் கோவிந்தசாமி, ஊர் பிரமுகர் மனோகரன், இளைஞர் மன்ற தலைவர் விஷ்ணு மற்றும் மன்ற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிறைவாக கலாமின் இளைஞர் மன்ற செயலாளர் மாதேஷ் நன்றி கூறினார்.

