தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (25.05.2022) காலை 6.00 மணி நிலவரப்படி சுமார் 8000 கன அடி தண்ணீர் வரத்து வந்து கொண்டிருப்பதாலும், நீர் வரத்து குறைந்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு ஆற்றின் அருவியில் குளிக்கவும், படகுகளை இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று 25.05.2022 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் விலக்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச. திவ்யதர்சினி இஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.

