பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 மே, 2022

பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் புலிக் கல் வருவாய்  கிராமம் புலிக்கல் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தங்களுடைய பட்டாவில்  பெயர் திருத்தம், உறவு முறை திருத்தம், நிலபரப்பு திருத்தம் உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்ள புலிக்கல் வி.ஏ.ஓ அலுவலகத்தில்   சிறப்பு பட்டா பதிவு திருத்த முகாம் நடைப்பெற்றது, இம்முகாமிற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார்.

இம்முகாமில் பாலக்கோடு தாசில்தார் ராஜசேகர், துணை வட்டாட்சியர் சத்யபிரியா, வருவாய் ஆய்வாளர் முருகன்,  வி.ஏ.ஓ சாம்ராஜ், வடிவேல், மாதப்பன்  மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் 2Oக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad