என் கணவர் இறந்து விட்ட பிறகு எனது மாமனார் உதவியுடன் என் குழந்தைகளை வளர்த்து வந்தேன்.எங்களுக்கு சுமார் 15 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது, இந்நிலையில் இந்த சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் எனது மகன் என்னையும், எனது மகள் விஜயாவையும் நிலத்திலும், வீட்டிலும் நுழைய விடாமல் தடுக்கிறார்.
மேலும் என்னை அடித்து வீட்டை விட்டு துரத்திவிட்டார்.என் மகன் என்னை தாக்கியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.இது சம்மந்தமாக மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதரவற்ற விதவையாக தனியாக இருந்து வரும் என்னையும், எனது மகளையும் கொலை செய்வதாக மிரட்டி வருகிறார். எங்கள் இருவரின் உயிருக்கும் பாதுகாப்பில்லை. எனவே என்னை வீட்டை விட்டு விரட்டி என்னை தாக்கிய மகன் மீது குடும்ப வன்முறை மற்றும் முதியோர் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுத்தும், எனக்கும், எனது மகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

