அரூர் கச்சேரி மேடு ரவுண்டானா வில் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு முழு உருவ சிலை அமைக்க வலியுறுத்தி கொங்கு மக்கள் முன்னணி சார்பில் நிர்வாகிகள் அரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அரூர் எம்எல்ஏ விடம் மனு.
தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரி மேடு ரவுண்டானாவில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என கொங்கு மக்கள் முன்னணி கட்சி சார்பில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு சம்பத்குமார் அவர்களிடம் கொங்கு மக்கள் முன்னணி கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரேம்குமார் தலைமையில் மாவட்ட மாணவரணி செயலாளர் அகரம் அஜித், குமரன், ஜெகன், வெற்றிச்செல்வன் பிரசாத் ராம்குமார் சந்திரசேகர் சக்திவேல் உள்ளிட்டோர் நேரில் சென்று கோரிக்கை மனுவை அளித்தனர்.

