தருமபுரி மாவட்டம் அரூர் - பெரியபட்டி செல்லும் அரசு நகரப்பேருந்து தடம் எண் 9, ஒரு வருட காலமாக இயக்கப்படாததால் அரூர் அரசு பேருந்து கிளை மேலாளரிடம் முன்னாள் பிஜேபி ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
நரிப்பள்ளி, வேடப்பட்டி, ராஜீவ் காந்தி நகர், கல் தானிப்பாடி, பெருமாள்புரம், புதூர், பெரியப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு காலை 7 மணி அளவில் இயக்கப்பட்டு வந்தது இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலங்களில் பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியை சார்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில் நிறுத்தப்பட்ட தடம் எண் 9 அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று கிளை மேலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இதில் முருகன், கிருஷ்ணமூர்த்தி, ராஜதுரை, பாலாஜி, நந்தகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக