பென்னாகரத்தில் குப்பை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு பேரணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 மே, 2022

பென்னாகரத்தில் குப்பை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு பேரணி.

பென்னாகரம் பேரூராட்சி சார்பாக தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மூலம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பேரூராட்சி அலுவலகம் வரை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி சார்பாக தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மூலம் பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தற்காலிக பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் கடைகளில் உள்ள பணியாளர்கள் மற்றும் பேருந்தில் பயணிக்கும் மக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து சாலைகளிலும் அல்லது சாலையோரங்களிலும் குப்பைகளை போடா வண்ணம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது தற்காலிக பேருந்து நிலையத்தில் சுற்றி உள்ள சிறு வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களின் கழிவுகளை தூக்கி எறியாமல் பேரூராட்சி பணியாளரிடம் குப்பை வண்டியில் கொடுக்கும் வணிக நிறுவனங்கள் உணவுப் பொருட்கள் தொடர்பான விற்பனை செய்யும் பொருட்களின் கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தர வேண்டுமெனவும் வணிக நிறுவனங்கள் தங்களது வியாபாரம் தொடர்பான பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் கண்ட இடங்களில் வைக்கவோ அல்லது ஒட்டக்கூடாது பேரூராட்சியின் அனுமதி பெற்று மட்டுமே வைக்கவேண்டும் பேராட்சி பகுதியில் உள்ள பயனற்ற இடத்திலும் மற்றும் கழிவுநீர் கால்வாய்களிலும் குப்பைகளை கொட்ட கூடாது என்றும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது மற்றும் சாலைகளில் உள்ள குப்பைகளை 60க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வைத்து சுத்தம் சுத்தம் செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வீரமணி, செயல் அலுவலர் கீதா, துணைத்தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துக் கொண்டனர்


கருத்துகள் இல்லை:

Post Top Ad