Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் மத்திய அரசை கண்டித்து சிபிஐ வி.சி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் முன்பு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையின்மை, வெறுப்பு அரசியல் ஆகிய பிஜேபி மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி.மாதையன் தலைமை வகித்து பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ராஜா முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் எஸ். கலைச்செல்வன்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் பொறியாளர் கருப்பண்ணன்  ஆகியோர் உரையாற்றினர்.நிறைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராஜன் கண்டன உரை ஆற்றினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் முனியப்பன், துணை செயலாளர் சம்பத், நகர செயலாளர் விஜயபாரதி, துணை செயலாளர் இல. தர்மராஜா, நகர பொருளாளர் கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். லட்சுமணன் , கவுன்சிலர் நாகராஜ், சண்முகம், லட்சுமி காந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிஜேபி மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.இறுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆட்டோ நாகராஜ் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies