அரூர் தாலுக்கா மொரப்பூர் முஸ்லிம் தெருவில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம்.யசோதா மதிவாணன் ஆகியோர் தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் மொரப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அ.செல்வம், மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.கே. மகாலிங்கம், கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜிமதிவாணன், மாவட்ட கவுன்சிலர் கே.கே.தனபால், மொரப்பூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் வினோதா ராஜா, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அன்சர், மாவட்ட சிறப்பான்மை பிரிவு நிர்வாகி அமானுல்லா, ஸ்ரீ ஸ்ரீராமுலு, காந்திநகர் முருகன், நடுப்பட்டி குள்ளு,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
