மகேந்திரமங்கலம், குண்டாங்காடு, கண்டகபைல், குளிக்காடு, கொத்தளம் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் வளர்க்கப்பட்டு வந்து செந்தூரா, பீத்தர் , பங்கன பள்ளி, மல்கோவா, நீலம், சக்கரகுட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ராகங்கள் நடப்பட்டு பராமரித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாங்காய்கள் விளைச்சல் தருகின்றன.
இந்த நிலையில் நடப்பு பருவத்தில் சீதோஷ்ண நிலை மற்றும் பூச்சி தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து காணப்படுகிறது.
அப்பகுதி மக்கள் மாங்காய் அறுவடைக்கு தயராக இருந்த நிலையில், கொத்தளம் வனப்பகுதிக்கு விரைந்த பாலக்கோடு வனத்துறையினர். விளைச்சலுக்கு வந்துள்ள மாங்காய்களை வனத்துறைக்கு சொந்தமானது என கூறி மாங்காய்களை பறிக்க முற்பட்டனர்.
இதையறிந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அதிகாரிகள் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மாங்காய் பறிக்க கூடாது வெளியேறுங்கள் என கூறினர்.
இது குறித்து பேசிய அப்பகுதிமக்கள் நாங்கள் ஒரு போதும் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லை, பல ஆண்டுகளாக நட்டு வளர்த்து, பராமரித்து வந்த மாமரங்களில் விளையும் மாங்காய்களை பறிக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

