இக்கூட்டத்தில் கடத்தூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா சரவணன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவ யுவராஜ். கவுன்சிலர் திலகா சிலம்பரசன். VAO ஹரிநாராயணன் ஊராட்சி செயலர் பிருந்தா உள்ளிட்ட 21 அரசு அதிகாரிகள் பங்குபெற்றனர்.
இக்கூட்டத்தில் கணக்கு எண் 30/2020-21 ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. கழிப்பறை பயன்பாடு ஊட்டச்சத்து நிவர்த்தி செய்தல், ஜெல்சக்தி ஜீவன், நமக்கு நாமே திட்டம், திடக்கழிவு மேலாண்மை, தூய்மை பாரத இயக்கம், பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட ஊராட்சியாக நிர்வகிப்பது, மக்கள் திட்ட இயக்கம் உள்ளிட்ட தீர்மானங்கள் வாயிலாக வாசிக்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.