பென்னாகரத்தை அடுத்துள்ள செங்கனூர் ஊராட்சியின் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மணி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் நரசிம்மன், வார்டு உறுப்பினர்கள் ஒன்றிய கவுன்சிலர் அங்கன்வாடி பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தின் வரவு செலவு படிக்கப்பட்டது. கிராமங்களில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் பற்றிய விவாதங்கள் நடைபெற்றது, குடிநீர் பிரச்சனை மின்விளக்கு உள்ளிட்டவைகள் கோரிக்கைகளாக மக்களால் முன்வைக்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர், பள்ளிக்கல்வி சார்பாக இல்லம் தேடிக் கல்வி, பள்ளி மேலாண்மைக்குழு, மாணவர் சேர்க்கை, இளம் வயது திருமணம் உள்ளிட்டவைகள் பற்றி தலைமையாசிரியர் மா. பழனி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் தீயணைப்புத் துறையினர் காவல்துறை, சுகாதாரத்துறை வருவாய்த்துறை பொது விநியோகத் துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற செயலர் ரங்கநாதன் நன்றி கூறினார்.