தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் அரூர் வெற்றிவேல் சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவர்கள் சிலம்பப் போட்டியில் கலந்துகொண்டு பாராட்டுச் சான்றிதழ்களும் வாழ்த்துக்களும் நினைவு பரிசுகளும் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றனர்.
இதில் முதல் முதலில் அரூர் தொகுதியிலிருந்து சிலம்பப் போட்டிக்கு சென்று வெற்றி பெற்று பாராட்டுகளைப் பெற்ற மாணவ மாணவிகளை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் மற்றும் கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞருமான ஆர். ஆர். பசுபதி, அரூர் நகர அதிமுக தலைவர் ஏ ஆர் ஆர் எஸ். பாபு, பெற்றோர் நலச் சங்கத் தலைவர் அமானுல்லா பாய் மற்றும் திரளான பெரியோர்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுகளையும் வழங்கி அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
உடன் வெற்றிவேல் சிலம்பப் பயிற்சி பள்ளி ஆசிரியர் சுரேஷ்குமார் அவர்களும் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை வாழ்த்துக்களை தெரிவித்தனர்