தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களான வேளாண்மை துறை அலுவலகம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,வட்டாச்சியர் அலுவலகம், உள்ளிட்ட அரசு அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பாப்பிரெட்டிப்பட்டி வட்ட கிளை சார்பில் வட்டதலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அரசு ஊழியர்கள் இணைந்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த சாத்தியமற்றது என தெரிவித்ததை கண்டித்தும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சத்துணவு அங்கன்வாடி ஊர்ப்புற நூலகங்கள், எம்ஆர்பி, செவிலியர்கள் கிராம உதவியாளர்கள் வன ஊழியர்கள் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஜனவரி முதல் வழங்க வேண்டிய மூன்று சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்புவிப்பை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி அந்ததந்த அரசு அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.