தர்மபுரி மாவட்டம் பேடரஹள்ளி ஊராட்சியில் உள்ள காளியம்மன் கோவில் கொட்டாய் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஆயிரம் ஆண்டு பழையான பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளியம்மன் கோயில் தேர்திருவிழா சித்திரை மாதத்தில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம், கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தேர்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதையடுத்து மாக்கனூர், மூக்கனஹள்ளி, வீரசெட்டிஹள்ளி, பூச்செட்டிஹள்ளி, பேடரஹள்ளி, சோளப்பாடி, தளவாய்ஹள்ளி போயர் தெரு, ஒசஹள்ளிபுதூர், ஆலாமரத்துப்பட்டி, திகிலோடு, மண்னேரி, மாங்கப்பட்டி ஆகிய 12 கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு மாவிளக்கு தட்டு எடுத்தும், பொங்கல் வைத்தும், ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது, இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை நாட்டு கவுண்டர் தர்மகர்த்தா 12 ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.