தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றிய பூகானஅள்ளி ஊராட்சி எண்டப்பட்டி உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாயி யோஜனா நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் (PMKSY-WDC-2.0 திட்டம் சார்பில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற அலுவலகம் மேல் கூரை மற்றும் கதவு ஜன்னல் கட்டிட சுவர் சேதமடைந்து எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழும் சூழ்நிலை உள்ளதால் மத்திய மந்திரியின் நீர்ப்பாசனத் திட்டம் குறித்து கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற கட்டிட அலுவலகத்துக்கு வெளியே சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பஞ்சாயத்தில் உள்ள கிராம மக்கள் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் அபாயமான நிலையில் உள்ளதால் உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன்பு புதிய கட்டிடம் அரசு அமைத்து தர வேண்டும் என்று பஞ்சாயத்து மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .இதில் பாலக்கோடு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா முன்னிலை வகித்தனர்.பூகானஅள்ளி பஞ்சாயத்து தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.தருமபுரி வளர்ச்சி அணி உறுப்பினர் பொறியாளர் வேலன் மற்றும் பஞ்சாயத்தில் உள்ள கிராம மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.