தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் காவல் நிலையம் முன்பும், பொம்மிடியில் ரயில் நிலையம் முன்பும் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சிலின்டர், மீதான வரிகளை கைவிட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வி.சிகட்சியின் ஒன்றிய செயலாளர் பாலைய்யா தலைமை தாங்கினார், மாநில நிர்வாகி நந்தன் முன்னிலை வகித்தார்.
அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக் கடைகளில் வழங்கிடவும் வருமான வரி உட்படாத குடும்பத்திற்கு மாதம் 7,500 வழங்கிடவும். நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை கொண்டு வரவும் வேலையில்லாத அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் முழுமையாக நிரப்பிட வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் நகர செயலாளர் ஜெகநாதன் மகளிர் அணி நிர்வாகி பார்வதி, தொகுதி செயலாளர் தமிழ் அன்வர், கடத்தூர் பேரூராட்சி துணை தலைவர் தீத்தகிரி, கவுன்சிலர் மயில்சாமி, பெருமாள், குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


