பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விவை உயர்வு வேலையின்மை உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இடதுசாரிகள் விசிக சார்பில் அரூர் வட்டாச்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கி.ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது, இதில் ஒன்றிய அரசின் பல்வேறு மக்கள் விரோத போக்குகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக மண்டல செயலாளர் பொ.மு.நந்தன், செய்திதொடர்பாளர் செ.பாரதிராஜா, தொகுதிசெயலாளர் சி.கே.சாக்கன் சர்மா,, ஒன்றிய செயலாளர்கள் எம்.எஸ்.மூவேந்தன், சோலை மா.ராமச்சந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரகுநாத் முருகன் பாஷா இளையராஜா சிபிஎம் சார்பில் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லிகா, ஒன்றிய செயலாளர் குமார், இ.கே.முருகன், மாது, பழனி, சிபிஐ சார்பில் மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமரன், கமலாமூர்த்தி, விஸ்வநாதன், கணேசன் நிர்வாகிகள் சா கோவிந்தராஜ், பெ.கேசவன், சோலை ஆனந்தன், ராஜ்குமார், ஞானசுடர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

